பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது மார்ச் 22ஆம் தேதி அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கைதட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
கொரோனா வைரஸ் விவகாரம் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி பேசும்போது எந்தவிதமான அறிவிப்பை வெளியிடுவார் என்பதை அறிய நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இன்றைய தினம் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது