இன்று 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (11:19 IST)
இன்றைய 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதை அடுத்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வரி ஏய்ப்புக்கான தண்டனை குறைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்