திருப்பதியில் முடிந்தது பிரம்மோற்சவம்.. 30 லட்சம் லட்டுகள் விற்பனை.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

Siva

ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (11:21 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக நடந்த பிரம்மோற்சவம் முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரம்மோற்சவம் தினங்களில் மட்டும் 30 லட்சம் லட்டுகள் விற்பனையானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் நான்காம் தேதி பிரம்மோற்சவம் விழா தொடங்கி, அக்டோபர் 12 வரை கோலாகலமாக நடைபெற்ற நிலையில், மலையப்ப சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். அவரை பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய கடைசி நாளில் கருட சேவை தரிசனத்தை மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையான பொருட்கள் குறித்த தேவஸ்தானம் தெரிவித்ததாவது, எட்டு நாட்களில் 50 ரூபாய்க்கு விரும்பத்தகுந்த சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்பனையானதாகவும், கடந்த ஆண்டும் இதே போன்ற விற்பனைகள் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களுக்கு மருத்துவ உதவி, அன்னதானம், தங்கும் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சரியாக செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்