ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நாளை, அதாவது அக்டோபர் நான்காம் தேதி, பிரம்மோற்சவம் விழா தொடங்குவதாகவும், அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு, கொடி கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரமோற்சவம் விழாவை அடுத்து, திருப்பதி திருமலையில் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்து, திருப்பதி மற்றும் திருமலை ஜெகஜோதியாக காட்சி அளித்து வருகிறது. திருப்பதி ரயில் நிலையம், தேவஸ்தான நிர்வாக அலுவலகம், திருச்சானூர் - திருப்பதி சாலை, சித்தூர் - திருப்பதி சாலை ஆகியவற்றில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.