டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்தார்.
கேரளாவில் சிகிச்சை எடுத்தும் நாள்பட்ட இருமல் அவரை வாட்டி வந்தது. இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் வரும் 13ம் தேதி அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அதன் பின்னர் 10 நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார்.
செப்டம்பர் 12ம் தேதி பெங்களூரு வரும் முதல்வர் கேஜ்ரிவால் அறுவைச்சிகிச்சை முடித்துக்கொண்டு 22ம் தேதி மீண்டும் திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை, அவரது பொறுப்புகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.