பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு எனும் சிறப்புத் திட்டம். விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து டுவீட் போட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்களின் 5 ஆண்டுகால திறனற்ற ஆட்சியில் விவசாயிகள் படாதபாடு பட்டுள்ளனர். நீங்கள் வருடத்திற்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் 6000 (நாள் கணக்கில்: ஒரு நாளைக்கு 17 ருபாய் கணக்கு) விவசாயிகளை கொச்சைபடுத்துவது போல இருக்கிறது. இந்த 17 ரூபாயை பெறுவதற்காகவா அவர்கள் இவ்வளவு பாடுபட்டார்கள் என ராகுல் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.