பட்ஜெட் 2019: வருமான வரி விலக்கு - நீங்கள் கவனிக்க வேண்டியவை

வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (16:11 IST)
இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இனி வருமான வரி ஏதும் செலுத்த வேண்டாம்.
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி வரம்பை 5 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
 
ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பியூஷ் கோயல். 
 
2018 ஆம் ஆண்டு பட்ஜெட் போது வரிவிலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட நடுத்தர வர்க்க எதிர்பார்ப்புகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத் தளத்தில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.
 
வருங்கால வைப்பு நிதி, மூலதனம், குறிப்பிட்ட சேமிப்புகள் உள்ளவர்கள் நடைமுறையில் 6.5 லட்சம் வருமானம் வரையில்கூட வருமான வரி செலுத்தவேண்டியிருக்காது என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
இதைவிடவும் கூடுதல் வருமானம் உள்ளவர்கள், வீட்டுக்கடன், கல்விக் கடன் ஆகியவற்றை செலுத்தினால் அவர்களும் வரிசெலுத்தும் நிலை ஏற்படாது என்றும் கோயல் கூறினார்.
 
வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் மூன்று கோடி நடுத்தர மக்கள் பயனடைவர்.
இதனால், 3 கோடி மத்திய தர வர்கத்தினர் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
 
நிரந்தர வைப்பு மற்றும் அஞ்சலக வைப்பு நிதியில் சேமிக்கும் பணத்துக்கும் கிடைக்கும் வட்டிக்கு ரூ.40 ஆயிரம் வரை TDS பிடிக்கப்படாது. இந்த வரம்பு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்தது. 
 
அஞ்சலக சேமிப்பில் 40 ஆயிரம் வரை  TDS பிடித்தம் இல்லை. வீட்டு வாடகை மூலம் வரும் வருவாயில் ஆண்டுக்கு 240,000 வரை  TDS பிடித்தம் இல்லை.
 
18,500 ஆயிரம் கோடிவரை அரசுக்கு இந்த வரி குறைப்பால் இழப்பு ஏற்படும் பணி கொடை உச்சவரம்பு பத்து லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
 
வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் மூன்று கோடி நடுத்தர மக்கள் பயனடைவர்.
 
இரண்டாவது வீட்டிற்கு, அதாவது கட்டி விற்கப்படாமல் அல்லது அதிலிருந்து வாடகை வருவாய் வராமல் இருக்கும் வீட்டிற்கு இரண்டு ஆண்டுகள் வரை வரி கிடையாது.
 
பட்ஜெட்டிற்கு பின் மும்பை பங்கு சந்தை 1.30 மணி அளவில் 370 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
 
வரி அடுக்குமுறை (Tax Slab) மாற்றப்படவில்லை.வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு திரும்ப வர வேண்டிய பணம் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்