மேலும் கடந்த மார்ச் 31 ஆம் தேதிவரை 50 வயது முடிந்த டிஜி, ஐஜி, டிஐஜி, எஸ்பி மற்றும் இதர பொறுப்பில் உள்ள அதிகாரிகளில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்காதவர்கள் பட்டியலை கூடிய சீக்கிரம் அதாவது இம்மாத இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை வரும் 21 ஆம் தேதி காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ளது.மேலும் தற்போது 56 வயதைக் கடந்த போலீஸாருக்கு பணி ஓய்வினை வழங்க 56 வது விதியின்படி அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.