இரண்டே பெண் கேரக்டர்கள் - ஹாலிவுட் பட தயாரிப்பு

J.Durai

வியாழன், 20 ஜூன் 2024 (12:36 IST)
இரண்டு பெண் கேரக்டர்கள் மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமானது படத்தின் ஆரம்ப 15 நிமிடம் முதல் இறுதி பத்துநிமிடம் தவிர மீதி 80 நிமிடங்கள் படம் பார்க்கும் நம் கால்கள் தரையில் இருந்தாலும் அந்தரத்தில் இருக்கும் திகில் உணர்வு இருக்கும் வகையில் உள்ளது.
 
படம் முடிந்தும் கொஞ்ச நேரத்துக்கு அந்தரத்தில் தொங்கி இருப்பதுபோல ஒரு ஃபீல் நமக்குள் தோன்ற வைக்கிறது.
 
அமெரிக்கா கலிபோர்னியா பாலைவனப் பகுதியில்1963ல் முழுக்க இரும்பால் செய்யப்பட்ட வானொலி கோபுரம். கிட்டத்தட்ட 2000அடி உயரம். அரசாங்கத்தால் கைவிடப்பட்ட கோபுரமாக இது இருக்க இதில் இரு  ட்ரெக்கிங் தோழிகள் ஏறி உச்சியில் சிக்கிகொள்ளும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
ஏன் அவர்கள் அதில் ஏறுகின்றனர்? அதன் பின்னணியில் ஒரு கல்யாணக்காதலும் துரோகக்காதலும் மரணமும் இணைத்து மிக சுவாரசியமாக படமாக்கம். படமாக்கப்படட விதம் கற்பனைக்கப்பாற்பட்ட டெக்னாலஜி மேஜிக். 
 
சர்வைவல் ஆப் தி ஃபிட்டஸ்ட் என்பதன் விஷூவல். 
 
உயிர்கள் வாழ்வா சாவா என்று வந்தால் எந்த எல்லைக்கும் போக தயங்காதவை என்பதை இந்த 2000அடி கோபுர படம் சொல்லும் செய்தியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்