மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (11:22 IST)
மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தை கண்டித்து  கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தில், தனியார் துறைகளில் வேலைபுரியும் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும் சட்டதிருத்தம் கொண்டு வந்தது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரளாவில் இன்று அனைத்து தொழிற்சங்களும், முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்