மறுபடியும்... அதே 'மழையா'... கேரளாவுக்கு திடீர் எச்சரிக்கை...
வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:28 IST)
கடந்த மாதத்தில் கேரளாவில் பெய்த கன மழையால் அங்கு பலத்த பொருளாதார சேதத்தையும் உயிர்சேதத்தையும் விளைவித்தது.
இதனால் பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். இந்த இயற்கை பேரழிவு இந்தியா முழுவதுமிருந்து கேரள மாநிலத்தின் பக்கம் அனுதாப அலைகளையும் ,மனித நேய மாண்பையும் காட்டும் விதமாக அமைந்திருந்தது.
நம் தமிழகம் இன்னும் ஒருபடி மேலே சென்று கேரளாவிற்கு தோள் கொடுப்பது போல நேசக்கரம் நீட்டி தேற்றி தன் பலமான ஆதரவு அளித்தது.
இந்நிலையில் தற்போது கடவுளின் தேசமான கேரளாவில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய ஆய்வு மையம் கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் பேரிடர் மீட்பு படையினர் தாயார் நிலையில் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எந்நேரமும் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அவர்களுக்கு மாநில அரசு தகவல் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.