போலீசாரை நடுரோட்டில் தாக்கி அட்டூழியம் செய்த ரவுடிகள்...

J.Durai

புதன், 29 மே 2024 (15:55 IST)
சேலத்தில் மதுபோதையில் போக்குவரத்து காவலரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிகள் 4 பேர் கைது செய்தனர்.
 
சேலத்தில் இரவு எட்டு மணி அளவில் சின்ன திருப்பதி பகுதியில் காரில் வந்த நான்கு பேர், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியபடி வேகமாக ஓட்டி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் , மணல்மேடு பகுதியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் புகார் தெரிவித்ததால், அவர்கள் காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை கீழே இறக்கினர். அப்போது நான்கு பேரும் அதிக அளவில் குடிபோதையில் இருந்தனர். மேலும் காரில் இருந்து இறங்கிய நான்கு பேரும் ,  போக்குவரத்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
மேலும் குடிபோதையில் இருந்த ஆசாமிகளிடம்,  கேள்வி எழுப்பிய பொது மக்களையும் அவர்கள் தாக்க  முயன்றதால் பரபரப்பு சூழ்ந்தது. 
 
மேலும் பொது மக்களையும் , போலீசாரையும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர்.
 
அப்போது செல்போன் மூலம் வீடியோ எடுத்த பொதுமக்களை தாக்க முயன்றனர்.இதனை அடுத்து போலீசார் குடிபோதையில் ரகளை செய்த நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருந்தவர்கள் சேலம் பணவாய் பேட்டை சேர்ந்த ரவுடி பிரகாசம் மற்றும் அவனது கூட்டாளிகளான மணிகண்டன் அருண்குமார் லிங்கேஸ்வரன் ஆகிய நால்வரையும் கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். குடிபோதையில் போலீசாரிடம் ரவுடி பிரகாசம், அவர் கூட்டாளிகளான அருண்குமார், மணிகண்டன்,லிங்கேஸ்வரன் ஆகிய நான்கு பேரும் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்