ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 68 ரன்களும், ரியான் பராக் 76 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோருக்கு பக்கபலமாக இருந்தனர்.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அரை சதம் வீழ்த்தியும் ஆபரேஷன் சக்ஸச் பேஷண்ட் டெட் என்பதுபோல ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. இந்த சீசன் தொடங்கி ராஜஸ்தான் அணியின் முதல் தோல்வி இதுவாகும். மேலும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் மெதுவாக பந்துவீசியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தோல்வியுடன் அபராதமும் சேர்ந்து கொண்டது ராஜஸ்தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.