விமானி அபிநந்தனுக்குக் கிடைத்த முதல் பெருமை

திங்கள், 4 மார்ச் 2019 (16:01 IST)
எஃப்  16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி என்ற சாதனையைப் படைத்துள்ளார் அபிநந்தன். காஷ்மீர் எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தானின் எ16 ரக போர் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானி அபிநந்தன். ஆர் - 73 என்ற ஏவுகனை மூலம் அதை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத தகவல் வெளியாகிறது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா விமானிகள் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த 3 எஃப் - 16 ரக விமானங்கள் காஹ்மீரில் உள்ள ரஜோரி ராணுவ முகாமை தவிர்ப்பதற்காக இந்த விமானங்கள் எல்லைக்குள் வந்தன.
 
ஆனால் இந்திய விமானிகளின் சாதுர்யமான தாக்குதலில் பாகிஸ்தான் விமானிகள் திரும்பச் சென்று விட்டனர்.
 
இதனையடுத்து  நம் இந்திய விமானி அபிநந்தன் மைக் 21 ரக விமானத்தில் சென்று அதிலிருந்த ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் எஃப் - 16 ரக விமானத்தை சுட்டுவீழ்த்தினார்.
 
பதிலுக்கு  எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டுக்குள் பாராசூட்டின் மூலம் தரையிரங்கினார். 
 
அதன் பின்னர் அவரை  பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. பின்னர் இந்தியாவுடன் பல்வேறு நாடுகள் அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவே அவரை இந்தியாவுகு அனுப்பினர்.
 
இந்நிலையில் உலகிலேயே எஃப் - 16 வகை போர் விமானத்தை சுட்டு வீழ்ந்திய வீரர் அபிநந்தன் தான் என்ற செய்திகள் வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்