26 வருடத்தில் அலுவலகத்திற்கு ஒரே ஒரு முறை விடுப்பு எடுத்த நபர்!

sinoj

புதன், 13 மார்ச் 2024 (17:49 IST)
பொதுவாக அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில்  பணிபுரிபவர்களில் பலர் விடுப்பு எடுக்காமல் உழைத்திருப்பதாக  ஊடகங்களில் செய்திகள் வெளியாகும்.
 
அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பணியை  நேசித்து செய்திருப்பார்கள். ஒரு சில  பண்டிகைகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் இதனால் பங்கேற்க முடியாமல் போயிருந்தாலும் கூட  அவர்கள் விடுப்பு இன்றி விருப்பத்துடன் பணிபுரிவது என்பது அவர்களின் தனிப்பட்ட வளர்சிக்குக்குரிய காரணியாக இருக்கலாம் என தெரிகிறது.
 
இந்த நிலையில்,   உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த  தேஜ்பால் என்பவர் 26 வருடத்தில் ஒருமுறை மட்டுமே விடுப்பு எடுத்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்துள்ளார்.
 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தேஜ்பால் என்பவர், ஜூன் 18 ஆம் தேதி தம்பியின் திருமணத்திற்காக ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துள்ளார்.  தன்னுடைய வேலையின் மீதுள்ள அதீத ஆர்வத்தினால் தீபாவளிக், ஹோலி, போன்ற பண்டிகை நாட்களிலும் அவர் விடுப்பு எடுப்பதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்