விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாஜகவில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் இணைந்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரரும் டில்லி கிழக்கு தொகுது எம்பியுமான கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகி, கிரிக்கெட் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதனால் அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்க பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
உத்தரபிரதேசம் - பாராபங்கி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உபேந்திர சிங் ராவத்தின் ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.