யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுவார்.. மிரட்டல் போன் அழைப்பால் பரபரப்பு..!

Mahendran

திங்கள், 4 மார்ச் 2024 (15:09 IST)
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுவார் என மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மார்ச் இரண்டாம் தேதி உத்தரபிரதேச மாநில பாதுகாப்பு தலைமையகத்தில் இருந்த தலைமை காவலர் ஒருவருக்கு வந்துள்ள மிரட்டல் அழைப்பில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுவார் எனக் கூறி அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்துள்ளதாக தெரிகிறது 
 
இது குறித்து தவறமை காவலர் செய்த புகாரின் அடிப்படையில் உடனடியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தொலைபேசியில் பேசிய மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் தற்போது தனிப்படை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு மாநில முதல்வருக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்