பள்ளிக்குள் நுழைந்து மாணவிகளை வன்கொடுமை செய்த மர்ம நபர்-- போலீஸார் வழக்குப் பதிவு !

Webdunia
வியாழன், 5 மே 2022 (20:10 IST)
டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் 2 பேரை அடையாளம் தெரியாத மர்ம  நபர் ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநகராட்சிப்  பள்ளியில், நுழைந்த  மர்ம நபர், அங்கிருந்த 2 மாணவிகளை ஆடைகளின் ஆடைகளைக் கழட்டி, அவர்கள் முன் சிறுநீர் கழித்துள்ளார். இது ஏப்ரல் 30 ஆதி நடைபெற்றது. இதுகுறித்து ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.ஆனால், இதை பள்ளி முதல்வர் மற்றும்  ஆசிரியர்கள் மறைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், போக்ஸோ சட்டத்தின் கீழ் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  மாநகராட்சிப்பள்ளி என்பதால் அங்கு கேமரா இல்லை; அதனால் குற்றவாளிகள் குறித்த தகவல் தெரியவில்லை என இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாணவிகள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் போலீஸார் மர்ம்ம நபரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்