இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தி கேரளா ஸ்டோரி படக் குழுவினர், கேரளாவின் நன்மதிப்பை மட்டுமின்றி கேரளா பெண்களையும் அவமதித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மாயமாகிவிட்டதாகவும், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால்,உண்மையில் 3 பேர்தான் ஐஎஸ்ஐஎஸ் குழுவில் சேர்ந்துள்ளனர். இத்திரைப்படம் புனையப்பட்ட கதை. இத்திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று கூறியுள்ளார்.