தமிழ்நாட்டில் 100க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!

திங்கள், 8 மே 2023 (07:54 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினசரி கொரோனா பாதிப்பு 500க்கு மேல் இருந்த நிலையில் தற்போது 100க்கும் குறைவாக குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை அழைத்துள்ளது.
 
இந்த  நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 90 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இதில் சென்னையில் மட்டும் 17 பேர்களும், செங்கல்பட்டில் 6 பேர்களும் கோவையில் 13 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6160 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 296 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் தற்போது 1220 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் யாரும் பலியாகவில்லை  என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்