பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு: குஜராத் மாநில அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (18:44 IST)
குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

பல்வேறு மதத்தினருக்கு என தனித்தனியாக சட்டங்கள் உள்ளதால், இதற்கு மாற்றாக அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது  குறித்து   பேச்சுகள் எழுந்து வந்த நிலையில்,  இதற்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அந்த வகையில்,  இச்சட்டத்தை அமல்படுத்துவதற்காக, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகிய மா நில அரசுகள் இதுகுறித்து குழு அமைத்துள்ளது. அங்கு  ஓய்வு பெற்ற  நீதிபதி தலைமையில் வரைக்குழு அமைத்து இதை அமல்படுத்துவதற்கும் அரசுகள் திட்டமிட்டுள்ளன.

;இந்த நிலையில், ‘’குஜராத் மா நிலத்திலும் ‘பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக ,மாநில முதல்வர் பூபேந்திர நாத்,  ஒரு குழு அமைக்க அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளதாக’’ அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்வி கூறியுள்ளார்.

 Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்