இதில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி பாஜக கட்சினர் பெங்களூரில் இரவு - பகல் தர்ணா போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் போராட்டத்திற்கென்றே போடப்பட்டிருந்த பந்தலில் பகலில் தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று இரவும் முழுவதும் நடைபெற்றது. எடியூரப்பா, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பாஜக கட்சியினர் இரவு நேரத்தில் அப்பந்தலிலேயே தூங்கினர்.