ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும்தான் பேச வேண்டும் என்ற தென்னிந்திய ரெயில்வேயின் அறிவிப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயாகந்த் “மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறில்லை” என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மும்மொழி கொள்கை குறித்து அப்படி பேசினாரா? அல்லது தற்போது ரயில்வே அதிகாரிகள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் இந்தியை தூக்கிபிடிப்பதே பிரதானமாக பிரேமலதா பேசியதில் இருந்து தெரிகிறது. ஏற்கனவே இந்த இரு சம்பவங்களுக்கும் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரேமலதா வரிந்துகட்டி கொண்டு சப்போர்ட் செய்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கு உள்ளாகியிருக்கிறது.