அதன்பின்,தமிழக அரசு, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பானவழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதல்வர் பரிந்துரை செய்தவதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ள நிலையில், தற்போது திருமாவளனும் வரவேற்றுள்ளார். இதுகுறித்து, அவர், கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாமெனும் பேரச்சம் எழுந்துள்ள நிலையில் அதனை தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பரிந்துரைக்க மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் முன்வந்திருப்பதை விசிக வரவேற்கிறது.பயங்கரவாதம் வேரறுக்கப்படவேண்டும்என்று தெரிவித்துள்ளார்.