இந்தியாவுக்கு கச்சா எண்ணெயில் 5 சதவீதம் தள்ளுபடி! - ரஷ்யா கொடுத்த சூப்பர் ஆஃபர்!

Prasanth K

வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (10:35 IST)

இந்தியா - ரஷ்யா இடையேயான கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியாவிற்கு 5 சதவீதம் கச்சா எண்ணெய்யை விலை குறித்து தரப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

 

உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து வந்த அமெரிக்கா, இந்தியாவிற்கு 25 சதவீதம் ஏற்கனவே வரி விதித்திருந்த நிலையில், ரஷ்யாவுடன் இந்தியா எண்ணெய் வணிகத்தில் ஈடுபடுவதை காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் வரி விதித்தது.

 

இதுகுறித்து சமீபத்தில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பேசியபோது, ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தியாவுக்கு வரியை ஏற்றினோம் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்தியா தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக கையாண்டு வருகிறது.

 

இந்நிலையில், இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்த வரிக்கு எதிராக ரஷ்யா இந்தியாவுக்கான தனது வரியை குறைத்துள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி “அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள் உள்ளபோதும், இந்தியாவுடனான கச்சா எண்ணெய் விநியோகத்தில் 5 சதவீதம் தள்ளுபடி தொடர்ந்து வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்