லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

Prasanth Karthick

வியாழன், 8 மே 2025 (10:34 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பரபரப்புக்கு நடுவே லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடித்துள்ளதால் வான்வெளியை பாகிஸ்தான் மொத்தமாக மூடியுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே குண்டி வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து கரும்புகை எழும்பிய நிலையில் விமான நிலையத்திலும் எச்சரிக்கை அலாரம் அடித்ததால் மக்கள் பீதியடைந்து வெளியேறினர். 

 

இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் கூறுகையில் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணங்களால் பாகிஸ்தானின் வான் எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்