நீதிமன்றத்தை நாடிய கோயில்கள்! முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Sinoj

புதன், 20 மார்ச் 2024 (22:40 IST)
உ.பி.,-ல் கோயில்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய  மாநில அரசின்   நிதியைப் பெற அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கோயில்கள் மாநில அரசின் நிதியைப் பெற  நீதிமன்றத்திற்கு வருவது குறித்து நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
 
 உத்தரபிதேச மாநிலத்தில் உள்ள கோயில்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய  மாநில அரசின்   நிதியைப் பெற அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
 
இந்த வழக்கில் அரசு தரப்பில், நிதிப் பற்றாக்குறையால் கோயில்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இதற்கு நீதிமன்றம், இவையெல்லாம்  தானாக நடக்க வேண்டிவை. இதுதொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்