மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற திமுகவுக்கு தைரியமில்லை- ஆர்.பி. உதயகுமார்

Sinoj

வியாழன், 7 மார்ச் 2024 (15:40 IST)
தமிழகத்திற்கு போதுமான நிதியுதவி அளிக்கவில்லை என்று திமுக அரசு மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டிற்கு தேவையான  நிதியை பெறுவதற்கு திமுகவுக்கு தைரியமில்லை என்று ஆர்.பி.  உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில்,    அதிமுக  இன்னும் சில நாட்களில் அதிமுக கூட்டணியில் விவரம் வெளியாகும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று தேமுதிகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டியதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், அதிமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் வரும் மக்களவை தேர்தலில்  அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் அருள்தாஸ் இன்று அறிவித்துள்ளார். இன்று மாலை புரட்சி பாரதம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதில், விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் புரட்சி பாரதம் கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது,
 
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு  அதிமுக,  மத்திய அரசையும், அதன் செயல்பாடுகளையும் கடுமையாக  விமர்சித்து வருகிறது. அந்த வகையில், மதுரை வாடிப்பட்டியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் ''மக்களுக்கு தேவையான நிதியை  வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் மனமில்லை ''இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
 
''திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது. விலைவாசியை உயர்த்திவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து ''நீங்கள் நலமா ?'' என்று கேட்டால் எப்படி நியாயமாக இருக்கும்?'' என்று தெரிவித்தார்.
 
மேலும், ''மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டிற்கு தேவையான  நிதியை பெறுவதற்கு திமுகவுக்கு தைரியமில்லை. மக்களுக்கு தேவையான நிதியை  வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் மனமில்லை;  பாஜகவிடம் தேர்தல் வியூகம் எதுவுமில்லை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலையை வெற்றிபெறச் செய்வதுதான் அதிமுக தொண்டர்களின் இலக்கு '' என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்