ஜனவரி 8 முதல் பள்ளிகளை மூட உத்தரவு: அண்டை மாநில முதல்வர் அதிரடி!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (07:00 IST)
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் ஜனவரி 8 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் சந்திரசேகர் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
ஜனவரி 8 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் என்றும் அதன் பின் நிலைமை இப்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்