மேற்கு வங்கத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அழகு நிலையங்கள், சலூன், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படவும், அத்தியாவாசிய சேவைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.