ரோஜா நடித்த ஆபாச படத்தை வெளியிடுவோம்! – ஓப்பனாக மிரட்டும் தெலுங்கு தேசம் கட்சி!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (11:11 IST)
ஆந்திர மாநிலத்தில் அமைச்சர் பதவி வகித்து வரும் ரோஜாவின் ஆபாச படத்தை வெளியிடுவோம் என தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். சமீபத்தில் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக உள்ள முன்னாள் நடிகை ரோஜாவுக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமைச்சர் ரோஜா, கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் மருமகள் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ரோஜாவின் தராதரத்தை விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சியினர் ரோஜா நடித்த ஆபாச படம் இருப்பதாக சில சிடிக்களை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்ததால் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து தான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் தன்னை சித்ரவதை செய்வதாக அமைச்சர் ரோஜா கண்ணீர் சிந்தியுள்ளார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்