இம்மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டண உயர்வு - எவ்வளவு தெரியுமா?

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (11:46 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 

 
தெலங்கானா மாநிலத்தில் வடக்கு மின் விநியோக நிறுவனம் (NPDCL) மற்றும் தெற்கு மின் விநியோக நிறுவனம் (SPDCL) என மின் உர்பத்தி செய்யும் மின் நிறுவனங்கள் மின் கட்டணத்தை 18% உயர்த்த கோரி கோரிக்கை வைத்தது. ஆனால் 14% வரை மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி கடந்த ஏப்ரல் 1 முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வீடுகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் முதல் 50 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.1.45ல் இருந்து ரூ. 1.95 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், வீடுகளில் 51 முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.2.60ல் இருந்து ரூ.3.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்