கேரள மாநிலம் கண்ணூரில், கள்ளக்காதலியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவர் அனீஸ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழகி வந்ததால், அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒருகட்டத்தில், அனீஸ் தனது கள்ளக்காதலியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தாலும், வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி இதை மூடி மறைத்துள்ளார்.ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி தைரியமாக தனது ஆசிரியரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
ஆசிரியரின் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்திய பிறகு, ஆட்டோ ஓட்டுநர் அனீஸைக் கைது செய்தனர். அனீஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.