இதனையடுத்து தன்னுடன் வரவில்லை என்றால் இருவரும் படுக்கையறையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக பிரகாஷ் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அந்த பெண் பிரகாஷ் மீது பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். ஆனால் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.