காங்கிரஸ் கட்சி கடந்த 2017- 2018 நிதியாண்டு முதல் 2020-2021 ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை. என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக சுமார் ரூ.1800 கோடி செலுத்த வேண்டும் என அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அரசிற்கு வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள், வரிப்பணம் என்பது பொது மக்களின் நலனுக்காகச் செலவிடப்படுகிறது. வரி செலுத்த காங்கிரஸ் மறுக்கிறது என்றால், அவர்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.