நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,96,427 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,69,48,874 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 3,511 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,07,231 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் டாடா ஸ்டீல் ஊழிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு இடைத்துள்ளது.