மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

Siva

வெள்ளி, 23 மே 2025 (07:36 IST)
கர்நாடக அரசுக்கு சொந்தமான மைசூர் சாண்டல் சோப்புக்கு பிரபல  நடிகை தமன்னாவை பிராண்ட் அம்பாசிடராக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "ஏன் ஒரு கன்னட நடிகையை தேர்வு செய்யவில்லை?" என நெட்டிசன்கள், கன்னட ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தமன்னா, 2 ஆண்டுகளுக்காக KSDL நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்குமான பிரசார தூதராகவும் செயல்படுவார். இதற்காக ரூ.6.2 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக MD ப்ரஷாந்த் தெரிவித்தார். “இந்திய அளவில் பிரபலமான முகம் தேவைப்பட்டதால் தமன்னா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று விளக்கமளித்தார்.
 
ஆனால் இந்த முடிவுக்கு  கர்நாடக ரட்சணா வேதிகை தலைவர் நாராயண கவுடா கண்டனம் தெரிவித்தார். “ஒரு மாநில பிராண்டுக்கு, உள்ளூர் நடிகையை ஏன் தேர்வு செய்யவில்லை? ரூ.6.2 கோடியை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும்,” எனக் கூறி, எதிர்ப்பு போராட்டம் நடத்த போவதாக எச்சரித்துள்ளார்.
 
மேலும் கன்னட நடிகைகளான நடிகை ரஷ்மிகா, தீபிகா, பூஜா ஹெக்டே போன்ற  பிரபலங்கள் ஏற்கனவே பிற பிராண்டுகளுடன் ஒப்பந்தத்தில் இருப்பதால், அவர்களை அணுக இயலவில்லை என அதிகாரிகள் கூறினர். KSDL விற்பனையின் 88% மாநிலத்திற்கு வெளியிலிருந்து வருவதால், தேசிய அளவிலான முகம் தேவைப்பட்டது எனவும் தெரிவித்தனர். இருப்பினும் இந்த பிரச்சனை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்