இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் பலர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜஸ்தான் அரசு, சுகாதாரத் துறை அதிகாரிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலைப் போல், கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் 21 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு இதுவரை பரவிய நோய்களின் அளவைக் காட்டிலும் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.