கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக கடந்த ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்ட வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மத்திய அரசிடம் விளக்கம் கோரி உள்ளன. அதாவது ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வரி எவ்வாறு விதிக்கப்படும் என விளக்கம் கேட்டுள்ளன.இது அடுக்கு வரி விதிப்புக்கு வழிவகுக்குமா என்று சந்தேகம் எழுப்பியுள்ளன.