கலவரம் செய்வதால் மனுவை விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

திங்கள், 16 டிசம்பர் 2019 (11:41 IST)
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா என்ற பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. இதனை அடுத்து அங்கிருந்த பேருந்து ஒன்றுக்கு மாணவர்கள் தீவைத்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர் 
 
இந்த நிலையில் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், போலீசார் தான் கலவரத்தை தூண்டியதாகவும் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவை விசாரிக்க மறுத்து விட்டனர். போராட்டம் என்பது கலவரமாக மாறக் கூடாது என்றும், போராட்டத்தில் கலவரம் செய்தது தவறு என்றும், பேருந்துகளை தி வைத்தது பெரும் தவறு என்றும் எனவே போராட்டம் நின்ற பின்னரே இந்த மனுவை விசாரிக்க முடியும் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்
 
எந்தவொரு போராட்டத்தையும் அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்றும் போலீசார் முதலில் நிலவரத்தை நிறுத்தட்டும், பின்னர் தேவைப்பட்டால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியது போராட்டக்காரர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது
 
மேலும் போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்