டி.என்.ஏவை காரணம் காட்டி தப்பிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (11:58 IST)
பாலியல் வழக்குகளில் டி.என்.ஏ சோதனையை மட்டுமே ஆதாரமாக கொண்டு குற்றவாளிகள் தப்ப முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு விராலிமலையில் 45 வயது நபர் முருகன் என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் டி.என்.ஏ சோதனைகளை ஆதாரமாக காட்டி உச்சநீதிமன்றத்தில் முருகன் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் ”குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே ஆதரமாக காட்டி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்