இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே. வினோத் சந்திரனுடன் இணைந்து நீதிபதிகள் நியமன் குறித்த புதிய தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்: அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
* நீதிமன்றத்தில் பணியாற்ற விரும்பும் நபர், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* இந்த புதிய விதி, தற்போது நடைபெற்று வரும் தேர்வுகளுக்கு பொருந்தாது.
* ஆனால் இந்த விதி அடுத்த கட்ட நீதிபதி நியமனத்திலிருந்து இது அமலுக்கு வரும்.
* சிவில் நீதிபதியாக தேர்வு எழுதும் எந்த விண்ணப்பதாரருக்கும் இந்த 3 ஆண்டு அனுபவம் கட்டாயமாகும்.
* அனைத்து மாநில அரசுகளும், தங்களது விதிமுறைகளை இத்தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
* அனுபவச் சான்றாக, 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரால் ஒப்புதல் பெற வேண்டும்.
* முன்பு சட்ட எழுத்தராக பணியாற்றிய அனுபவமும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
* சட்டம் படித்து வந்த புதுமுகர்கள் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படுவது, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* வழக்கறிஞர் அனுபவமின்றி நேரடியாக நீதிபதியாகும் நபர்கள், நம்பிக்கைக்குரிய வழக்குகளை கையாளும்போது திறமையற்ற நிலையில் காணப்படுவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நீதித்துறையின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.