கருணைக் கொலையை அனுமதிக்கலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (11:15 IST)
தீராத நோயுடையவர்களை விதிக்கு உட்பட்டு மரணமடைய அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 
இந்தியாவில் பலமுறை தீராத நோயுடைய பலர் நீதிமன்றங்களில் கருணைக் கொலையை அனுமதிக்குமாறு விண்ணப்பித்தனர். ஆனால், நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை. 
 
இந்நிலையில், அது தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு  முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் “தீராத நோயுடையவர்களை சில விதிகளுக்குட்பட்டு மரணமடைய அனுமதிக்கலாம். மீளமுடியாத நோயால் அவதிப்படுபவர்கள் கண்ணியத்துடன் இறக்க உரிமை உண்டு. நலம் பெற வழி இல்லை என்றால் செயற்கை உயிர் காக்கும் முறைகளை கைவிட்டு உயிர் துறக்கலாம்” என தீர்ப்பு அளித்தனர். மேலும், கருணைக் கொலைக்கான சில விதிமுறைகளையும் அவர்கள் வகுத்துக் கொடுத்தனர். 
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கருணைக் கொலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்