வீட்டுக்காவலில் முன்னாள் முதலமைச்சர்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலியா?

திங்கள், 11 டிசம்பர் 2023 (11:12 IST)
சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த வழக்கில் தீர்ப்பு வெளிவர இருப்பதை அடுத்து முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி  வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய அரசு சட்டத்தின் 379 ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த நிலையில் அதை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்தது.

இந்த நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மெகபூபா முப்தியின் வீட்டுக்கதவுகளை காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்