14 மொபைல் மெசெஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

திங்கள், 1 மே 2023 (14:38 IST)
தீவிரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசேஜ் செயலிகள் முடக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள ஒரு சில மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் வெளியானது.

இதனை அடுத்து எந்தெந்த தீவிரவாத குழுக்கள் எங்கு எங்கு இருந்தெல்லாம் தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதை கண்டுபிடித்த மத்திய அரசு இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 14 செயலிகளை அதிரடியாக முடக்கி உள்ளது.

இந்த செயலிகள் மூலம் தீவிரவாதிகள் தங்களின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் மற்றும் பிற பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளை அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்