இனி ஃபாரின் போக அவசியமில்ல.. எல்லாமே காஷ்மீரில் இருக்கு! – 300 இடங்கள் அடங்கிய திரைப்பட சுற்றுலா!

வெள்ளி, 12 மே 2023 (15:01 IST)
ஜம்மு காஷ்மீரில் ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு நிகரான சுற்றுலா பகுதிகளை சினிமாத்துறையினருக்கு அடையாளம் காட்டும் வகையில் திரைப்பட சுற்றுலா அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது பல மொழி படங்களிலும் பல பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடுகளுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் பழைய படங்களில் வெளிநாடுகளுக்கு இணையான அழகான காட்சிகளை உள்நாட்டிலேயே பல இடங்களில் படம் பிடித்திருப்பார்கள். அப்படியாக முக்கியமான படபிடிப்பு தளமாக இருந்தவற்றில் ஜம்மு காஷ்மீரும் ஒன்று.

சாதாரண சுற்றுலா பயணிகள் முதல் திரைப்பட படப்பிடிப்பு வரை ஜம்மு, காஷ்மீரில் குறைவில்லாமல் காண ஏராளமான பகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டில் மட்டும் 200 படங்கள் மற்றும் வெப் சிரிஸ்கான படப்பிடிப்புகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் திரைப்பட படப்பிடிப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் திரைப்பட காட்சிகளை படமாக்க உகந்த 300 பகுதிகளை கண்டறிந்து அவற்றை பட்டியலிட்டுள்ளனர். ஆன்லைனிலும் இந்த இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் தேர்வு செய்யும் இடங்களில் படப்பிடிப்பு நடத்த தேவையான வசதிகளை அரசு செய்து தரும் என ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையின் நிர்வாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்