ஒரே நாளில் அடுத்தடுத்து அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் - 4 தீர்ப்புகளின் தொகுப்பு!
வியாழன், 14 நவம்பர் 2019 (12:11 IST)
உச்சநீதிமன்றம் இன்று ஒரே நாளில் நான்கு முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் முழு தொகுப்பு இதோ...
சமீபத்தில் பலரும் எதிர்ப்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியன அநிலையில் இன்று சபரிமலை வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு, ராகுல் காந்தி வழக்கு, தெண் பெண்ணை ஆற்றில் அணை கட்டுவது குறித்த வழக்கு என 4 வழக்குகளின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
சபரிமலை வழக்கு:
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரளா அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு வழங்கிய நிலையில், மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆம், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ரபேல் ஊழல் வழக்கு:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு தொடரப்பட்டது. இந்நிலையில், ரபேல் போர் விமான வழக்குக்கு அளிக்கப்பட தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுவையும் இன்று தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ராகுல் காந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:
பிரதமர் மோடியை திருடன் என கூறியதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பேசும்போது ராகுல் காந்தி கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இனி அவர் ஒருபோதும் இதுபோல ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று எச்சரித்து ராகுல் காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தெண் பெண்ணை அணை வழக்கு:
கர்நாடகாவில் தொடங்கி கிருஷ்ணகிரி வழியாக கடலூர் வரை செல்கிறது தென்பெண்ணை ஆறு. இதன் கிளை ஆறான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா திட்டமிட்டது. இதனால் தமிழகத்துக்கு நீர்வரத்து குறையும் என கர்நாடகா அணை திட்டத்திற்கு எதிராக தமிழகம் வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதி அளித்து தமிழகத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.