இன்று சபரிமலை வழக்கு, ரஃபேல் வழக்கு, ராகுல் காந்தி வழக்கு என்று முக்கியமான வழக்குகளுக்கு ஒரேநாளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. சபரிமலை வழக்கில் விசாரணையை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் ரஃபேல் போர் விமான வழக்குக்கு அளிக்கப்பட தீர்ப்புக்கு எதிடான மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதுபோலவே நீதிமன்றம் பிரதமரை திருடன் என கூறியதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் “உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பேசும்போது ராகுல் காந்தி கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இனி அவர் ஒருபோதும் இதுபோல ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது” என்று எச்சரித்து ராகுல் காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தனர்.