மகாராஷ்டிராவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருந்த நிலையில் பாஜகவை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுனர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது சிவசேனா. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க ஆணையிட்டது.
அதனால் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் இன்றே விசாரணை நடைபெற்று வருகிறது. சிவசேனா தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகியுள்ளார். இந்நிலையில் வாதாடிய பாஜக வழக்கறிஞர் “இதை ஞாயிற்றுக்கிழமையே விசாரிக்க வேண்டிய அவசியல் இல்லை” என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் “உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் இது அவசர வழக்காக இன்றே விசாரிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.
தனது தரப்பு வாதத்தை பேசிய கபில்சிபல் கர்நாடகத்தில் செயல்படுத்தியது போல 24 மணி நேர அவகாசத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்றும், அதிக கால அவகாசம் கொடுத்தால் அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.