ஒரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு

திங்கள், 8 ஜனவரி 2018 (16:07 IST)
ஒரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது.

 
2009ஆம் ஆண்டு ஒரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு அதை ரத்து செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 377-ன் கீழ் ஒரே பாலினத்திருடன் உறவு வைத்துக்கொள்வது குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 
 
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒரினச் சேர்க்கையாளர்கள் 5 பேர் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச், இந்த மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்தது. 
 
மேலும், சட்டப் பிரிவு 377-ஐ மறுவரையை செய்ய வேண்டும், காலத்திற்கு ஏற்ப நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த 377 சட்டப் பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்